"Squid Game" தொடரை சிறுவர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் ; மன நல மருத்துவர்கள் அறிவுறுத்தல்
உலகம் முழுவதும் அமோக வரவேற்பு பெற்ற Squid Game தொடரை பார்க்க சிறுவர்களை அனுமதிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தெருவில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டுகளை, பரிசுத் தொகைக்காக கடனில் மூழ்கிய 400 பேர் விளையாடுவது போலவும், போட்டியில் தோற்பவர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்படுவதை போலவும் Squid Game உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் Netflix-ல் வெளியான இந்த தென் கொரியத் தொடரை, ஒரு மாதத்துக்குள் 11 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பார்த்ததால் இது வரை எந்த தொடருக்கும் கிடைக்காத வரவேற்பு இதற்கு கிடைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இத்தொடரில் வன்முறை நிறைந்த கோர காட்சிகள் அதிகம் உள்ளதால் இது சிறுவர்கள் மனதில் வன்முறை எண்ணெங்களை விளைவிக்க கூடும் என மன நல மருத்துவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
எனவே இத்தொடரை பார்க்க சிறுவர்களை அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகளில் இந்த தொடரை பற்றி பேசவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments